மார்ச் 14 ஆம் திகதி வெள்ளிக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
42

மேஷம்:
மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்:
கடகராசி அன்பர்களே! தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகப் பணிகளில் பொறுமை அவசியம். சக ஊழியர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.

சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.

கன்னி:
கன்னிராசி அன்பர்களே! சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும்.

துலாம்:
துலாராசி அன்பர்களே! காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். உடல்நலனில் கவனம் தேவை. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தந்தைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே! தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

தனுசு:
தனுசுராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகை கிடைப்பது தள்ளிப் போகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மகரம்:
மகரராசி அன்பர்களே! புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:
கும்பராசி அன்பர்களே! காரியங்களில் பொறுமை தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளில் குறுக்கிடவேண்டாம். அலுவலக விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.

மீனம்:
மீனராசி அன்பர்களே! எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உங்கள் முயற்சி களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர் ஒருவரிடம் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here