அஸ்வெசும பெறாத குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு மட்டும் மார்ச் மாதம் 20ஆம் திகதி அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களின் வழியாக 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான கொடுப்பனவுகளை அஸ்வெசும கணக்கில் வைப்பிலிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.