சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடை ய32 வயது மற்றும் 29 வயதுடைய இந்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி தம்பதி முதல் முறையாக இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
பயணப் பொதிக்குள் சூட்சுமான முறையில் மறைத்து வைத்து குஷ் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.