நீர்கொழும்பு – யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற விபத்தில் யானைக் குட்டி உயிரிழப்பு.!

0
28

நீர்கொழும்பு யாழ்ப்பாண வீதியில் அமைந்துள்ள கல்கமுவில் இடம்பெற்ற விபத்தில் யானை குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று HIACE வானில் விபத்துள்ளாகி இறந்துள்ளது,

நீர்கொழும்பு யாழ்ப்பாண வீதியில் அமைந்துள்ள கல்கமுவ வீதியில் சம்பவம் நடந்துள்ளது.

இன்று அதிகாலை 12:30 மணியளவில் நீர்கொழும்பு யாழ்ப்பாண வீதியில் அமைந்துள்ள கல்கமுவ வீதியில் சென்ற HIACE HI ROOF ரக வாகனத்தில் வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.

வாகனத்தில் சென்றவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி சிறு காயங்களுடன் தப்பினர்.

தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.

ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் உன்னிப்பாகம் மிக அவதானத்தோடும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here