யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.