லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் இன்று புறப்படவிருந்த UL 503 மற்றும் 504 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டதையடுத்து விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதேவேளை இந்த விமானங்களில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த பயணிகள் மேலதிக தகவல்களுக்காக பயணச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.