கிளிநொச்சியில் பிரபல யூட்டுபேர் DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். என கூறப்பட்டிருந்தது, அனால் அவரது மனைவி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்மபுரம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு தலையில் 5 பாரிய வெட்டுக்கள், முதுகு மற்றும் கைகளில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது மனைவிக்கு 6 வெட்டுக்கள், மற்றும் அவரது தாயின் கை முறிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பம் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி கடந்த (15) கிளிநொச்சி போலீசாரால் கைதுசெய்யப்பட்டு இருந்தனர், பின்னர் இன்றைய தினம் பிணையில் அவரது மனைவி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார். கணவனுக்கு 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் என கூறப்படுகின்றது