கொழும்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பெண் ஒருவர் கைது.!

0
36

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால், மேலும் இரண்டு நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் காயமடைந்தனர்.

இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காகவும், உடந்தையாக செயற்பட்டதற்காகவும் சந்தேக நபர் ஒருவர் இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் மார்ச் 18ஆ் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக சந்தேக நபரின் மனைவியும் நேற்று (20) கிரேண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொட்டுவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here