யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த, அருட்பிரகாசம் மணிவண்ணன் (வயது-35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மதுப் பாவனைக்கு அடிமையானவர், இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி மைத்துனருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக, மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.
சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பி, வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டார், இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
யாழில் நடந்த சோகம்.. கணவன் தக்கியதால் இளம் மனைவி எடுத்த முடிவு.!