யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி ஒருவர் நின்றுகொண்டிருப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையில் யுவதியிடம் இருந்து ஐஸ் போதைபொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரான யுவதி திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட யுவதி யாழ் . நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.