வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய கைதியை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.