தும்பர சிறைச்சாலை அதிகாரிகளிடம், வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இக்கோரிக்கை பெரும்பாலும் நிறைவேற்றப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
நியாயமான காரணங்களை வழங்கி, தடுப்புக் கைதிகள் வெளியில் இருந்து உணவு கோர உரிமை உண்டு என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வெலிகம ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.