கிளிநொச்சி, பரந்தன், குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.