நாட்டிற்குள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு (22) விமான நிலைய வருகை முனையத்தில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, டுபாயில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் கொண்டு வந்த 10,000 சிகரெட்டுகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
டுபாயில் இருந்து வந்த விமானத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.