புதையல் தோண்டிய மூவர் கைது.!

0
35

தொல்பொருள் பெறுமதிமிக்க பாதுகாப்பு வனப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் உட்புகுந்து புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் மூவரை அநுராதபுரம் சிவலாக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிவலாக்குளம் பொலிஸார் நேற்று சனிக்கிழமை ஹல்மில்லவெவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 29,37,48 வயதுடைய மிஹிந்தலை மற்றும் கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் சிவலாக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here