பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவில் வருடாந்த தேர்த் திருவிழாவில் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின் – டிரெய்லர் கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (22) பகல் இடம்பெற்றுள்ளது.
டிராக்டரின் டிரெய்லரில் இணைக்கப்பட்டிருந்த பறவைக்காவடி (தொங்கும் சாதனம்), கூர்முனைகளில் தொங்கிய நபருடன் சேர்ந்து, வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது.
பின்னர், தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்டு கோவிலுக்கு ஊர்வலம் அழைத்துச் சென்றனர்.
டிராக்டர் டிரெய்லர் சமநிலையை இழந்து டிராக்டர் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.