யாழ் அச்சுவேலி பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவர் மீது வீடுபுகுந்து மண்வெட்டியால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் இதுவரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என சமூக வலைத்தளத்தில் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கான சரியான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
எது எப்படி இருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுப்பது தவறு, உரிய முறையில் காவல் துறையை நாடி, ஆசிரியர் தவறு இழைத்து இருந்தால், தண்டனை வாங்கிக் கொடுத்து இருக்கலாம் என சமூக வலைத்தளத்தில் பதிவுகள் கூறப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.(fb)