மார்ச் 24 ஆம் திகதி திங்கட் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
55

மேஷம்;
இன்று வீடு நிலம் தொடர்பான முதலீடு விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று முதலீடு சார்ந்த விஷயம் சிந்தித்து செயல்படுவதும், நலம் விரும்பிகளின் ஆலோசனை பெறுவதும் நன்மை தரும். தொழில் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சகோதரர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்று உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்;
இன்று எந்த வேலை செய்தாலும் அதை முழு நம்பிக்கையுடன் செய்ய வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பணம் ஆகும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். துணையுடன் உறவு மேம்படும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு வேலையும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்;
இன்று ஊக்கமளிக்கும் நாளாக இருக்கும். வேலை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்றைய எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படுவார்கள். வாழ்க்கை துணையுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று நிதி நிலை முன்னேற்றக் பழைய கடனை அடைக்க முடியும். விரும்பிய நற்பலனை பெற்ற மகிழ்ச்சியடைவீர்கள்.

கடகம்;
இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முதலீடு செய்ய முயல்வீர்கள். தந்தைக்கு தந்தையின் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் தேவை.. மாணவர்கள் தேர்வு தொடர்பாக சிறப்பாக செயல்படுவார்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செய்து விட வாய்ப்பு உண்டு.

சிம்மம்;
இன்று உங்களின் செல்வாக்கு மற்றும் கௌரவம் அதிகரிக்கும். துணை உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வி, விளையாட்டு போன்ற விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கக்கூடிய நாள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மன அழுத்தம் சற்று அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி;
இன்று மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும் நாள். புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியது நாள். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் நிறைந்திருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

துலாம்;
இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முடியும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் உடன் பிறந்தவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

விருச்சிகம்;
இன்று குடும்ப உறுப்பினர்களுடன் வேடிக்கையாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு பிடித்தமான பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். அன்றாட தேவைகள், வசதிகளை பூர்த்தி செய்ய அதிக பணம் செலவாகும். காதல் வாழ்க்கையில் துணையின் புரிதல் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

தனுசு;
இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். பிள்ளை கல்வி தொடர்பாக எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். தொழிலதிபர்கள் பண பற்றாக்குறை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு.

மகரம்;
இன்று சிறப்பான நாளாக அமையும். உங்கள் வேலையில் நேர்மையுடனும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றியும், மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். இன்று சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகளை கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. பந்தயம் அல்லது சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்;
இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத பணவரவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கை துணையிடமிருந்து நேர்மறையான செய்திகள் கிடைக்கும்.

மீனம்;
இன்று முக்கிய வேலைகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்கள் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களுடன் உறவு மேம்படும். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் நிறைந்திருக்கும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று எந்த ஒரு வேலையை தைரியத்துடன் செய்தால் அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பாக நல்ல தகவல்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here