துரதிஷ்டவசமாக உயிரிழந்த 23 வயதான யுவதி.. காதலன் வீட்டுக்கு சென்றபோது நேர்ந்த துயரம்..!

0
123

களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாத்துவ மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிரசாதினி பிரியங்கிகா, நேற்று மதியம் தனது காதலனின் பாட்டியிடம் நலன் விசாரிப்பதற்காக களுத்துறை பனாபிட்டியவில் உள்ள தனது காதலரின் பாட்டியின் வீட்டிற்குச் நேற்று மாலை தனது காதலனுடன் சென்றிருந்தார்.

காதலன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு உணவினை வழங்குவதற்காக வீட்டின் பின்னால் சென்றிருந்த வேளை, அந்த நேரத்தில் பிரியங்கிகாவும் வீட்டின் பின்னால் உள்ள சுவர் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, ​​திடீரென சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த போது, பிரியங்கிகா அதில் சிக்கிக்கொண்டார்.

குடியிருப்பாளர்கள் உடனடியாக பிரியங்கிகாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் உயிரிழந்தார். (video-fb)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here