கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 11.04.2025ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களிற்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(25.03.2025) செவ்வாய்க்கிழமை காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.