திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் 08ம் வாய்க்கால் பகுதியில் குழந்தையொன்று வீட்டுக்கு முன்பாக உள்ள வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம், திங்கட்கிழமை (24) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தை மிஹ்ரான் இசான் வயது (ஒரு வயது எட்டு மாதம் நிறைந்த) எனத் தெரியவருகிறது.
வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ள குழந்தையை தேடிய போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் சடலமாக மீட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.