மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். (battinews)