கனடாவின் டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா – மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பாலமுரளி மற்றும் டொரண்டோவைச் சேர்ந்த பிரன்னன் பாலசேகர் ஆகியோர் ஆவர்.
இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று அங்கு குடியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சம்பவத்தின் பின்னர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கமரா அமைப்புகளை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இருவரும் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும் பல சொத்து திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த விசாரணைகளின் பின்னர் இருவரையும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்னறம் உத்தரவிட்டது.