எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடும்தீவு கடப்பாரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அழைத்துவரப்பட்டு, பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைதான மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.