இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே. குலநாயகத்தின் மகள் செல்வி ஆன் சுமங்கலா குலநாயகம் (வயது-35) திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே, மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. (photos-FB)
அன்னாரின் ஆத்மா சாந்தி பெறட்டும். பிரிவால் துயறுரும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.