இன்று (29) அமாவாசை நாளில் நடக்கும் சனிப்பெயர்ச்சி.. யார் கவனமாக இருக்க வேண்டும்..! சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Video

0
155

சனி பகவான் நவகிரகங்களில் நீதிமானாக பார்க்கப்படுகிறார். சுமாராக இரண்டரை வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம், மார்ச் 29 ஆம் தேதி அன்று தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.

அதாவது இன்று இரவு 9.44 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்து மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

மீன ராசியில் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு வரை சனி இருப்பார் என்றும் ஜோதிடம் கூறுகிறது.

30 ஆண்டுகளுக்கு பின்னர் சனி பெயர்ச்சி சனி அமாவாசை நாளில் நடப்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிகப்பட்ச பலனை கொடுக்கப்போகிறார்.

தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார் என்பதால் அவர் நன்மை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சனி நன்மையை தருவாரா என்பது அவரவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தே அமையும். இன்றைய தினம் தனது குலதெய்வத்தை வணங்கலாம். பெருமாளையும் வணங்கி வேண்டிக் கொள்ளலாம்.

தானம் செய்ய வேண்டும், செடிகளுக்கு நீருற்ற வேண்டும், உதவி என கேட்டு வந்தால் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும், இன்று இறைச்சி உண்ண கூடாது, வாயில்லா ஜீவன்களை வதைக்கக் கூடாது உள்ளிட்டவைகளை செய்தால் சனி நன்மையை கொடுப்பார் என்பது நம்பிக்கை.!

சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள்; வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here