நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு..!

0
32

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர்.

இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதனால், உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here