பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரஹேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.