நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும்.
இதேவேளை, மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.