முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் ஹரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியை சேர்ந்த 38 வயது குறித்த நபர், கிராம சேவையாளராக இருக்கும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ் பாவித்த குற்றசாட்டில் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது குறித்த நபரின் கிராம சேவையாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
பின்னர் குறித்த நபர் நேற்றைய தினம் (28) புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயினுடன் நின்றபோது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தலைமையில் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் இவர் தனது GS அடையாள அட்டையை வைத்தது கிராம சேவையாளர் பதவி பறிக்கப்பட்ட பிப்பும் பல மோசடிகளில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் (29) புதுக்குடியிருப்பு போலீசார் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆயர் படுத்த உள்ளனர்.
மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.