சுன்னாகம் – கந்தரோடை, பழனி கோவிலடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்றையதினம் (29.03.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளானது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவராசா பிரவீன் எனும் 19 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருநபர் சிக்கிய நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.