ஒட்டுசுட்டான் உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை..!

0
104

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், உணவுக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களான லோஜிதன், டிலக்சன், நதிருசன் ஆகியோர் சனிக்கிழமை (29) நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, உணவுக் கடையொன்றிலிருந்து மனித பாவனைக்குதவாத பத்து கிலோ கிராம் ரொட்டி, றோல்ஸ் போன்ற உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி குறித்த கடை சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்தமையும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சுகாதாரமான முறையில் இயங்க நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கடையானது, வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சுகாதாரமான முறையில் இயங்காவிடின் கடையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here