எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் முல்லைத்தீவு – நெட்டாங்கண்டல் மூன்றுமுறிப்பு பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஸ்வரன் (வயது -52) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
கடந்த வியாழக்கிழமை (27) மைத்துனரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இளம்மருதங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்தவர் நெட்டாங்கண்டல் வைத்தியசாலையில் இருந்து மல்லாவி மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை நெட்டாங்கண்டனல் பொலிசார் நெறிப்படுத்தினர்.