நாளை (31) வெப்பநிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!

0
48

நாளை (31) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும் என்றும், இது மனித உடலால் உணரப்படக்கூடிய அளவிற்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலை காரணமாக வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பிலலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here