மயங்கி விழுந்த குடும்பப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு.!

0
90

வீதியால் நடந்து சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த சிறிக்காந்தன் வசந்தா (வயது-68) என்பவராவார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடைக்கு பொருள்கள் வாங்கிவிட்டு வீதியால் சென்றவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (29) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here