முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.!

0
126
Common Photo

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவின் தம்மென்னாவ – உப்புல்தெனிய வீதியின் கட்டுகெலியாவ பகுதியில், சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, பெண் ஒருவர் மற்றும் பின் இருக்கையில் இருந்த இரண்டு ஆண்கள், அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார்.

உபுல்தெனிய பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here