கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (30)கைது செய்யப்பட்டுள்ளதுடன் 100 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து நடத்திய தேடல் வேட்டையின் போது சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகாமையில் உள்ள அரசொல்லை பகுதியில் வைத்து வாகனத்துடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
இவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை கொழும்புக்கு கடத்துவதற்கு தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.