காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது.!

0
36

கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு விற்பனைக்காக 10 கிராம் ஐஸ்போதைப் பொருளை எடுத்து வந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நேற்றையதினம்(31) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொழும்பில் இருந்து 10 கிராம் 33 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளை எடுத்து கொண்டு வந்த வியாபாரி ஒருவரை சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here