நீர்த்தேக்கத்தில் 22 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
79

மலையகம் – தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் 22 வயது மதிக்கத்தக்க யுவதியின் சடலம் இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் நீர் தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்டபோது, உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்த யுவதி டயகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவரது குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் காணாமல் போய்விட்டதாக டயகம பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்திருந்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here