யாழில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்..!

0
43

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும் மனைவியும் வேலைக்கு செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்

சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here