போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்.!

0
14

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிகபட்ச சில்லறை விலைகள் 2025 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும்.

அதன்படி, போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை பின்வருமாறு;

500 – 999 மில்லி லீட்டர் போத்தல்கள் – ரூ.70
01 -1.499 லிட்டர் போத்தல்கள் – ரூ.100
1.5 -1.999 லிட்டர் போத்தல்கள் – ரூ.130
02 – 2.499 லிட்டர் போத்தல்கள் – ரூ.160
05 – 6.999 லிட்டர் போத்தல்கள் – ரூ.350