யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு.!

0
63

யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இளவாலை – உயரப்புலத்தை சேர்ந்த இன்னும் பெயர் சூட்டப்படாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

கடந்த 19.02.2025 அன்று மேற்குறித்த பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கு ஏழு மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஆண் குழந்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் கண்ணாடி பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

பின்னர் கடந்த 28 ஆம் திகதி பெண் குழந்தையும் தாயும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆண் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்ணாடிப் பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் தாயார் தினமும் வைத்தியசாலைக்கு வருகை தந்து ஆண் பிள்ளைக்கு பாலூட்டி வந்துள்ளார். குறித்த பெண் குழந்தைக்கு தாயார் நேற்று காலை வீட்டில் வைத்து பாலூட்டியுள்ளார்.

காலை 6.00 மணியளவில் பெண் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்ட நிலையில் குழந்தை மயங்கியது. இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here