முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதில் பொதுவெளியில் வைத்து இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது…
ஒட்டுசுட்டான் – சின்னச்சாளம்பனில் 2 கைக்குழந்தையின் தாயான இளம்பெண்ணொருவரை நடுவீதியில் வைத்து சரமாரியாக தாக்கியதில் அப்பெண் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது, குறித்த பெண்ணும் தாக்கியவரின் மனைவியும் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் வேலை செய்துவந்துள்ளார்கள். தனது மனைவியின் நடத்தை பற்றி அப்பெண் அவதூறாக கூறியதாக அதனை விபரமாக அறிந்து முடிவெடுத்துக்கொள்ளாத நபர் வேலைவிட்டு பேரூந்தில் இறங்கியவுடன் நடுவீதியில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார்.
இக் கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டவருக்கும் இதனுடன் தொடர்புடைய அருகிலிருந்தவர்களுக்கும் எதிராக சரியான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டமென்பதோடு, இப்படி கொடூரமாக தாக்கப்பட்ட அப்பெண்ணுக்காக முறையான விதத்தில் நீதி கிடைக்கவேண்டும் என்பதை இக்காணொளியை பார்க்கும் அனைவரும் பொலிஸாரின் கண்ணில் படும்வரை பகிர்ந்து கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இச் சம்பவம் நடக்குமிடத்தில் இருக்கும் அத்தனைபேரில் எவரும் தடுப்பதற்கு உறுதுணையாக இல்லாமல் குறித்த சட்டவிரோத செயற்பாட்டாளரை வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்திருக்கின்றனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக காணொளியூடாக தெரியவருகின்றது.(Video-fb)