யாழில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது.!

0
25

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது 2 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

நாவற்குழி பகுதியை சேர்ந்த இருவரும், குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here