இளைஞன் மரணம்; OIC பதவிநீக்கம்.. இரு பொலிஸார் இடைநீக்கம்.!

0
114

வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் 01.04.2025 அன்று இரவு நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அந்த நபர், கைது செய்யப்பட்டதன் பின்னர், ஒழுங்கீனமான நடத்தை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் சந்தேக நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த சம்பவம் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக, வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரைகள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக, பதில் பொலிஸ் மா அதிபரினால், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (06) அன்று, அனுப்பப்பட்டது.

இந்த சம்பவத்தில் கடமைகளை புறக்கணித்ததாகக் கண்டறியப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் பசரற, மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகரான நிமேஷ் என்பவரே மரணமடைந்தார். அன்னாரின் பூதவுடன் மகஹகிவுலவில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here