முஸ்லீம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்ப்பு..! Video

0
64

அனுராதபுரம் – கெகிராவ பகுதியில் இளம் முஸ்லீம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்த துயரமான சம்பவம் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் அனுராதபுரம் – கெகிராவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இவ்வாறு தூக்கிட்டு இறக்க வாய்ப்பே இல்லை எனவும், இது கொலையா? தற்கொலையா? என்று நீதியான விசரனை வேண்டும் என அந்த குடும்பத்தினர் பொலீஸாரிடம் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் செய்கின்றார் என்றும் மாமனார் மாமியாருடன் வசித்துவந்த மருமகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

”மரண அறிக்கையில் எனது மனைவியின் மரணத்திற்கு காரணம் தற்கொலை” என உறுதிப்படுத்தப்பட்டுள்ளுதாக அவரது கணவன் இன்று (07) அவரது முகநூலில் தெரிவித்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (FB)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here