ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது.!

0
63

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு கடை முதலாளி ஒருவரை இன்று அதிகாலை 1.30 மணியளவில் 27 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித்த லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழயை இரும்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை முதலாளியை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 27 கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சதாம் உசையின் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here