அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று புதன்கிழமை (09) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.