உயிரிழந்த நபரொருவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு 2 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர் தனது அலுவலகத்தில் வைத்து இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அங்கு இருந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் பெண் உதவியாளரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.