அமெரிக்காவின் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையினூடாக தீர்வை எட்ட முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
பண்டிகை காலத்தில் நாட்டு மக்களுக்கு சதொச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்திருந்தோம்.
எனினும் எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 4 லட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும்.
இதேவேளை, அமெரிக்கா அறிவித்துள்ள வரி, இலங்கையின் பொருளாதாரத்தில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை மூலம் இந்த விடயத்தில் நிவாரணத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு வரவு வைக்கப்பட்டுள்ளது.. செக் பண்ணுங்க..!